தர்மபுரி கலெக்டர் தலைமையில்பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்407 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன

Update: 2023-09-11 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று கொண்டார். இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட இதர உதவித்தொகைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 407 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் நசீர் இக்பால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாகுல் ஹமீது, பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன், உதவி திட்ட அலுவலர் தமிழரசன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்