சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் பங்கேற்பு
சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் பங்கேற்றார்
சூரமங்கலம்
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சியின் வளர்ச்சி பணி, பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் சேலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், சக்திவேல், மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் எஸ். வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் கலந்து கொண்டு பேசும் போது, 'வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே நிர்வாகிகள் பணிகளை தொடங்க வேண்டும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். மதுரை மாநாட்டிற்கு சேலம் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோரை அழைத்து சென்று மாநாடு சிறப்பாக நடைபெற பாடுபட வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலாளர்கள் மாரியப்பன், யாதவமூர்த்தி, சண்முகம், பாண்டியன், முருகன், கவுன்சிலர் ஜனார்த்தனன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.