ஒட்டம்பட்டியில் பா.ம.க. மாணவர் சங்க கூட்டம்எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் பங்கேற்பு

Update: 2023-07-03 19:30 GMT

நல்லம்பள்ளி:

தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நல்லம்பள்ளி அருகே ஒட்டப்பட்டியில் மாணவர் சங்க பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அருண்மூர்த்தி, வினோத்குமார், மணி மகேந்திரன் அய்யந்துரை, மிதுனாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவர் சங்க தலைவர் சத்ரியபிரபாகரன் வரவேற்றார். கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினர்.

இதில் முன்னாள் எம்.பி.க்கள் டாக்டர் செந்தில், பாரிமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவர் சங்க துணை தலைவர் தமிழரசு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்