மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

வள்ளியூரில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

Update: 2023-05-03 19:39 GMT

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் மீனாட்சி- சொக்கநாதர் கோவிலில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. பின்னர் மீனாட்சி அம்மனுக்கு பட்டு அலங்காரம், சொக்கநாதருக்கும் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண நிகழ்ச்சியை குருக்கள் பரமேஸ்வர பட்டர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஏற்பாடுகளை திருநாவுக்கரசர் சிவப்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்