அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகள்-குப்பைகள்

அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கழிவுகள்-குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

Update: 2022-12-04 18:03 GMT

பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள், குப்பைகள் மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அதனை தினந்தோறும் அள்ளப்படுவதில்லை. மலை போல் குவிந்து வரும் மருத்துவ கழிவுகள், குப்பைகளால் தூர்நாற்றம் வீசுவததோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதனால் அருகே மருத்துவமனை கட்டிடத்தில் உள்ேநாயாளியாக சிகிச்ைச பெறும் நோயாளிகள, அருகே பள்ளி மாணவ-மாணவிகள், அம்மா உணவகத்தில் உணவு சாப்பிடுவர்கள் மற்றும் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனை வளாகத்தில் குவித்து வைக்கப்படும் மருத்துவ கழிவுகள், குப்பைகளை உடனுக்குடன் அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்