மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊக்கத் தொகையை கால தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-24 18:45 GMT

நாகர்கோவில், 

ஊக்கத் தொகையை கால தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தன்னார்வலர்கள் என்பதை ஊழியர்கள் என பெயர் மாற்றி அங்கீகரிக்க வேண்டும், ஊக்கத் தொகையை மாதம்தோறும் தாமதம் இன்றி வழங்க வேண்டும், ஊதியமாக நிர்ணயம் செய்து காலத்திற்கு ஏற்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஒரே சீரான பணி நேரத்தை நிர்ணயம் செய்து முழு நேர ஊழியராக்க வேண்டும், அரசு விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்களை விடுப்பாக கருத வேண்டும், தீபாவளி பண்டிகை கால செலவுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், ஊழியர்களின் ஊதியத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திரளான பெண்கள்

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் விக்னேஸ்வரி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன், தமிழ்ச்செல்வி, இந்திரா, சந்திரபோஸ், சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திரளான பெண்கள் கலந்துகொண்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்