மன்னார்குடி பகுதி அரசு பள்ளிகளில் படித்த 3 மாணவிகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்தது
மன்னார்குடி பகுதி அரசு பள்ளிகளில் படித்த 3 மாணவிகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்தது.
அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கான உள்ஒதுக்கீட்டில் மன்னார்குடி பகுதி பள்ளிகளில் படித்த 3 மாணவிகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. மன்னார்குடி அடுத்த ஆலங்கோட்டை அரசு திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் படித்த சுரேகா என்ற மாணவிக்கு சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அதே போல உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைலைப்பள்ளியில் படித்த லட்சுமிபிரியா என்ற மாணவிக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், மாணவி கீர்த்தனாவிற்கு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது. இந்த மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.