மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம்
மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
நொய்யல்,
நொய்யல் அருகே குளத்துப்பாளையம் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று அங்குள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.