மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்

மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2023-07-30 20:25 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை நகராட்சி சார்பில் எம்.டி.ஆர் நகர் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தொடங்கி வைத்தார். முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர்மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, தி.மு.க. நகர செயலாளர் மணி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மருத்துவ முகாமில் 7, 23 மற்றும் 24-வது வார்டு பகுதி மக்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பதிவு செய்யப்பட்டது.

மேலும் பழைய காப்பீட்டு திட்ட அட்டை புதுப்பிக்கும் பணியும் நடைபெற்றது. முகாமில் நகர்மன்ற உறுப்பினர்கள் செந்திவேல், பூமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை 7-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கோகுல், வார்டு செயலாளர் தங்கராஜ் ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்