காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக்கல்லூரி மாணவர் மூழ்கி பலி

கிருஷ்ணராயபுரம் அருகே நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மருத்துவக்கல்லூரி மாணவர் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-11-27 19:20 GMT

காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவர்

தென்காசி மாவட்டம், இடையக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் முகமது ஜமீன்கான் (வயது 21). இவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று விடுமுறை என்பதால் முகமது ஜமீன்கான் தனது நண்பர்களுடன் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் காவிரி ஆற்றுக்கு குளிக்க வந்தார்.

இந்தநிலையில் காவிரி ஆற்றில் முகமது ஜமீன்கான் இறங்கி தனது சக நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது காவிரி ஆற்றில் கிளை வாய்க்கால் பிரியும் இடத்தில் ஆழமான பகுதிக்கு ெசன்று முகமது ஜமீன்கான் குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்ட அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என அபாய குரல் எழுப்பினர்.

பிணமாக மீட்பு

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி முகமது ஜமீன்கானை தேடினர். ஆனால் நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, சுமார் ஒரு மணி நேரம் ஆற்றில் இறங்கி மாணவரை தேடினர். பின்னர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு கரூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் முகமது ஜமீன்கான் பிணமாக மீட்டனர்.

இதையடுத்து முகமது ஜமீன்கான் உடலை மாயனூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக்கல்லூாி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்