கிராம உதயம் சார்பில் மருத்துவ முகாம்
கிராம உதயம் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
சேரன்மாதேவி:
பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் இணைந்து உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, கிராம உதயம் அலுவலகத்தில் மருத்துவ முகாமை நடத்தியது.
கிராம உதயம் நிறுவன இயக்குனர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கேன்சர் கேம்ப் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சுப்புலட்சுமி கலந்துகொண்டு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன், முருகன் மற்றும் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.