நத்தம் ஊராட்சியில் மருத்துவ முகாம்

நத்தம் ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-11-05 18:15 GMT

கந்திலி ஒன்றியம் நத்தம் ஊராட்சியில் மழைக்காலத்தை முன்னிட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார் தலைமை வகித்தார். கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி, துரை முன்னிலை வகித்தனர். மருத்துவ முகாமை கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன் தொடங்கி வைத்து பேசினார். முகாமில் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் பொது மருத்துவம், இருதயம், கண், பல் சிகிச்சை, இ.சி.ஜி, எக்ஸ்ரே, ரத்த அழுத்தம், உள்ளிட்ட பரிசோதனை நடத்தப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்