மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
திருவாடானையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
திருவாடானை,
திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் திருவாடானை வட்டார வள மையம் இணைந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை நாளை (செவ்வாய்க்கிழமை) திருவாடானை யூனியன் அலுவலகத்தில் நடத்துகிறது. முகாமில் பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்குதல், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் ஆலோசனை, இலவச ரெயில் மற்றும் பஸ் பயணச் சலுகை, உதவி உபகரணங்களுக்கான பதிவு, உதவித்தொகைக்கான பதிவு, மருத்துவ ஆலோசனை, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு முதலிய சேவைகள் வழங்கப்பட உள்ளன. அனைத்து மாற்றுத்திறன் குழந்தைகளும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவாடானை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.