கோத்தகிரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

கோத்தகிரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

Update: 2023-01-31 18:45 GMT

கோத்தகிரி

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் கோத்தகிரி வட்டார வள மையம் சார்பில் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் மலர்விழி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அமீலியா ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்தாருதுவ முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், காது மூக்கு தொண்டை நிபுணர், பொதுநல மருத்துவர், குழந்தை நல மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பரிசோதித்து தேசிய அடையாள அட்டைக்கு பரிந்துரை செய்தனர். இந்த முகாமில் பங்கேற்ற மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பயணபடி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை இயன்முறை மருத்துவர் திவ்யா, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தன், ஹேரி உத்தம் சிங் ஆகியோர் செய்து இருந்தனர். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் பிரியா.அனைவரையும் வரவேற்றார். முடிவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்