மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு மருத்துவ முகாம்

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-02-14 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு மருத்துவ மதிப்பீடு முகாம் நேற்று நடந்தது. முகாமை மாவட்ட கல்வி அதிகாரி ஜெயபிரகாஷ் ராஜன் தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அதிகாரி சின்னராசு, மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பாலசுப்பிரமணியன், மனநல மருத்துவர் நிரஞ்சனா தேவி, எலும்பு முறிவு மருத்துவர் அமித் கண்ணா, குழந்தை நல மருத்துவர் ஜெய செல்வராணி, கண் மருத்துவர் உமா ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் 80 பேருக்கு பரிசோதனை நடத்தினர். இவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள், உபகரணங்கள் தேவைப்படுபவர்களுக்கு ஏற்பாடு செய்வதற்கான படிவங்களும் பூர்த்தி செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில் வட்டார கல்வி அதிகாரிகள் முத்தம்மாள், பத்மாவதி, ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ செல்வி, சாமுவேல் ஜான்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் நட்டாத்தி, ஒருங்கிணைப்பாளர் ஜமிலா பானு ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்