மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்காக மதுரை வடக்கு வட்டார வள மையம் சார்பில், சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நேற்று நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம், மதுரை மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கிடையே, மதுரை வடக்கு வட்டார வள மையம் சார்பில், சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாரக் கல்வி அலுவலர் பாண்டியன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாக்கியராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூரியகலா மற்றும் மாவட்ட அனைத்து வட்டார வள மைய சிறப்பாசிரியர்கள், பிசியோதெரபிஸ்டுகள், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் 268 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர்.