மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடத்தது.
கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 10-ந்தேதி கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 12-ந்தேதி கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 20-ந்தேதி அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 24-ந்தேதி கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 27-ந்தேதி குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 31-ந்தேதி தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அடுத்த மாதம் 3-ந்தேதி க.பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் , 7-ந்தேதி தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. மாற்றுத் திறனாளி குழந்தைகள் வட்டார அளவில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மருத்துவச் சான்று பெறுதல், உதவி உபகரணங்கள் பெறுவதற்கு விண்ணப்பம் செய்தல், ஆதார் அட்டை எடுத்தல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பம் செய்தல் மற்றும் பிற உதவிகள் தொடர்பான பணிகள் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்களது ஆதார் அட்டை மற்றும் பாஸ்போட் சைஸ் போட்டோ - 4 ஆகியவற்றுடன் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.