நஞ்சப்பசத்திரத்தில் மருத்துவ முகாம்

வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரி சார்பில் நஞ்சப்பசத்திரத்தில் மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-06-26 12:45 GMT

குன்னூர், 

குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தின் போது நஞ்சப்பசத்திர கிராம மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மக்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டும் வகையில், தென்பிராந்திய ராணுவம் மூலம் நஞ்சப்பசத்திரம் கிராமம் தத்தெடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மாதந்தோறும் வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரி சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று தாய் மற்றும் குழந்தை நலம் குறித்த மருத்துவ முகாம் நஞ்சப்பசத்திரத்தில் நடந்தது. வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் மகப்பேறு மற்றும் உடல்நலம் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்