மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-05-09 19:10 GMT

திருக்காடுதுறை பகுதியில் வாங்கல் வட்டார சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் அய்யம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மோனிகா தலைமையில் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டு, முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.பின்னர் அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்