கால்நடை மருத்துவ முகாம்

காரைக்குடி அருகே கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-04-27 18:45 GMT

காரைக்குடி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரில் சிவகங்கை மகளிர் திட்ட இயக்குனர் வானதி அறிவுறுத்தலின் பேரிலும், உதவி திட்ட இயக்குனர் விக்டர்பெர்ணாடஸ் வழிகாட்டுதலின்படி காரைக்குடி அருகே சிறுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெத்தாட்சிகுடியிருப்பு கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிறுகப்பட்டி, பெரியகோட்டை, ஜெயகொண்டான் ஆகிய ஊராட்சியில் உள்ள கிராம மக்கள் கலந்துகொண்டு தங்கள் கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். மருத்துவ பரிசோதனையை பீர்கலைக்காடு கால்நடை டாக்டர் வேலுமாரியப்பன் தலைமையில் கண்டனூர் கால்நடை ஆய்வாளர்கள் செல்வராணி, அரியக்குடி கஸ்தூரிதிலகா, பீர்கலைக்காடு கால்நடை பராமரிப்பாளர் மல்லிகா ஆகியோர் மேற்கொண்டனர். முகாமில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்பின் மூலம் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட ஆடு, மாடுகளுக்கு காப்பீடு வழங்குதல், குடற்புழு நீக்க மருந்து கொடுத்தல் ஆகியவை வழங்கப்பட்டது. முகாமில் சிறுகப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, துணைத்தலைவர் தமிழ்குடிமகன் மற்றும் கிராம மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்