மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-04-10 18:52 GMT

கரூர் பழைய அரசு மருத்துவமனையில் நேற்று சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தலைமை தாங்கி பேசுகையில், நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். இதனால் ஆரோக்கியமாக இருந்தனர். தற்போது நோய் இல்லாமல் வாழ்வது சவாலாக உள்ளது. தற்போது தண்ணீர், பால், எண்ணெய் உள்ளிட்ட அனைத்து உணவுகளிலும் கலப்படம் இருக்கிறது.

உரங்கள் இல்லாமல் எந்த தானியத்தையும் உற்பத்தி செய்வதில்லை. அந்த காலத்தில் இருந்த உணவு பொருட்கள் ஆரோக்கியமாக இருந்தது. மனிதர்களும் ஆரோக்கியமாக இருந்தார்கள். தற்போது சாப்பிடும் உணவு நோய்களை தான் ஏற்படுத்துகிறது. காலத்திற்கு தகுந்தாற்போல் மனிதர்கள் மாறிக்கொண்டு வருகின்றனர். நோய் இல்லாமல், மருந்து இல்லாமல் யாரும் இருப்பது இல்லை. இந்த நிலை மாற வேண்டும். நமது பிள்ளைகளுக்காவது மாற்றம் வேண்டும். மனிதர்களுக்கு உணவுதான் மருந்து. சமையல் அறைதான் மருத்துவமனை. பெண்கள்தான் முதல் மருத்துவர், என்றார்.

இதில், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, ஏ.ஆர்.டி. துணைத்தலைவர் டாக்டர்.சுமதி, டாக்டர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்