மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-10 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் கதிர்வேல் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் முனியாண்டி, பேரூராட்சி தலைவர் நஜிமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் பற்றி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி காளிமுத்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சரளா, மாவட்ட தொழில் மைய அலுவலர் ராஜேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊர்காவலன், சாந்தி, பேரூராட்சி செயல்அலுவலர் கோபிநாத், மருத்துவ அலுவலர், தனி தாசில்தார் அந்தோணிராஜ், துணை தலைவர் இப்ராஹிம், தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன், பைரோஸ்கான், சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்