தோகைமலை அருகே உள்ள ராக்கம்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை, காய்ச்சல், சளி, இருமல் உள்பட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து நோய் தன்மைக்கு ஏற்றவாறு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து சுகாதாரத் துறை சார்பாக சுகாதார ஆய்வாளர் பொன்னுச்சாமி தலைமையில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு நீக்கம், மருந்து ஊற்றுதல், கொசு மருந்து அடித்தல் குறித்து அறிவுரை வழங்கினர். அப்போது குடிதண்ணீரை காச்சி குடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வட்டார மருத்துவர் தியாகராஜன் அறிவுரை வழங்கினார். இதில் டாக்டர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.