மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-12-08 18:36 GMT

கரூர் மாவட்டம், ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நொய்யல் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைெபற்றது. இதைெயாட்டி செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் மேற்கண்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்