கால்நடை மருத்துவ முகாம்

Update: 2022-11-11 15:48 GMT


காங்கயம் ஒன்றியம் பொத்தியபாளையம் ஊராட்சி, பொத்தியம்பாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை பொத்தியபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சந்திரசேகர் தொடங்கிவைத்தார்.

முகாமில் காங்கயம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் டாக்டர்.என்.குமாரரத்தினம், டாக்டர் அமுதா ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து வகையான கால்நடைகளுக்கும் இலவசமாக சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டனர். இதில் சுமார் 1083 கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, குடற்புழு நீக்கம், சினைபரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை தரிக்காத கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை, நோய் மாதிரி பொருட்கள் பரிசோதனை, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.மேலும் முகாமில் கலந்துகொண்ட கிடாரிக்கன்றுகளில் சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு கேடயமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த முகாமில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேலும் செய்திகள்