தேவகோட்டை,
தேவகோட்டை வட்டாரத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை மற்றும் பல்துறை பணியாளர்களுக்கு, சிறப்பு மருத்துவ முகாம் தேவகோட்டை யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையாளர் மாலதி வரவேற்றார். யூனியன் தலைவர் பிர்லா கணேசன் முகாமை தொடங்கி வைத்தார். துணை தலைவர் புதுக்குறிச்சி ராசாத்தி நடராஜன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார், மாவட்ட இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், மருத்துவ பணிகள் மற்றும் துணை இயக்குனர் விஜயசந்திரன், தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் சாந்தி, தேவகோட்டை மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் செங்கதிர், இ.என்.டி. மருத்துவர் மணிமொழி, இருதய மருத்துவ நிபுணர் தங்க மணிகண்டன், எலும்பு மருத்துவர் சிவதானு, பொது அறுவை சிகிச்சை மருத்துவர் சுதா, பல் மருத்துவர், கண் மருத்துவர் பிரியா, சித்த மருத்துவர் முகமது யாசர், ஆயுஸ் யோகா மருத்துவர் மற்றும் பொது மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் 350-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், தேவகோட்டை யூனியன் மேலாளர் ஜோதிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.