பொது மருத்துவ முகாம்

பொது மருத்துவ முகாம்

Update: 2022-09-30 11:00 GMT

அவினாசி,

அவினாசி வட்ட சட்டப்பணிகள் வழக்கறிஞர்கள் சார்பாக நீதிமன்ற வளாகத்தில் பொது மருத்துவ முகாம் நடந்தது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் கே.சுரேஷ்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.எஸ்.சபீனா, மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.வடிவேல் ஆகியோர் மருத்துவ முகாமினை தொடங்கிவைத்தனர். முகாமில் வழக்கறிஞர்கள், போலீசார் மற்றும் அவினாசி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 70 பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 160 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு தீபா மருத்துவமனை, ஆதார் பல துறை மருத்துவமனை, ஆதார் கிளினிக், திருப்பூர் வாசன் கண் மருத்துவமனை ஆகிய மருத்துவர்கள் இரத்த பரிசோதனை, இ.சி.ஜி, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண், பல், மூட்டு பரிசோதனை, ஆகிய பரிசோதனைகள் செய்து மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது.



Tags:    

மேலும் செய்திகள்