பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Update: 2022-09-22 18:56 GMT

ராஜபாளையம்

தமிழக அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல், சளி, இருமல் போன்றவை கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் சேத்தூர் சேவுக பாண்டிய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகர்மன்றத் துணைத் தலைவர் கல்பனா தலைமையில் முகாம் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார அதிகாரி ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் குணசீலன் தலைமையில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் காளி, பழனிக்குரு ஆகியோர் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்