மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் அருப்புக்கோட்டையில் நடைபெற்றது.

Update: 2023-09-24 20:24 GMT

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டை நகராட்சி மற்றும் மதுரை பாரதி மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நகராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நடைபெற்ற இந்த முகாமினை முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம் தொடங்கி வைத்தார்.

முகாமில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், தோல் நோய் உள்ளிட்ட இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக்குமார், தி.மு.க. நகர செயலாளர் மணி, சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்