மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-09-19 18:36 GMT

தவுட்டுப்பாளையம், கட்டிப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்றனர். பின்னர் முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள். டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்