சிறப்பாக செயல்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு பதக்கம்
பயிற்சி முகாமில் சிறப்பாக செயல்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு பதக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு 47 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட படை வீரர்களுக்கான 45 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாம் நிறைவு பெற்று, பயிற்சி நிறைவு கவாத்து மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இந்த அலங்கார அணிவகுப்பிற்கு மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா தலைமை தாங்கினார். பயிற்சியை நிறைவு செய்த ஊர்க்காவல் படை வீரர்களுக்கு, பொதுமக்கள் சேவையில் போலீஸ் துறையின் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட படை வீரர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதக்கங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.