மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி
திருமருகல் அருகே மின்சாரம் தாக்கி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை பெரிய தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் ராமநாதன(வயது 22). ஐ.டி.ஐ. முடித்துள்ள இவர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பயிற்சி மெக்கானிக்காக இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமநாதன், சீயாத்தமங்கை கைகாட்டி அருகே வந்தார். அப்போது அவர் அங்கு மண் தரையில் புதைக்கப்பட்டிருந்த இரும்பு பைப்பிலான கொடிக்கம்பத்தின் மீது சாய்ந்தபடி நின்றார்.
அப்போது அந்த கொடிக்கம்பம் அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதனால் ராமநாதன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமருகல் அருகே மின்சாரம் தாக்கி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.திருமருகல் அருகே மின்சாரம் தாக்கி மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.