அரசு பஸ் மோதி மெக்கானிக் படுகாயம்

தியாகதுருகத்தில் அரசு பஸ் மோதி மெக்கானிக் படுகாயமடைந்தாா்.

Update: 2023-04-29 18:45 GMT

தியாகதுருகம்:

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணி(வயது 20). இவர் தியாகதுருகத்தில் உள்ள தனியார் கடையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்க் எதிரே திரும்பியபோது, பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, மேல் சகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மணியின் தாய் பாஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் அரசு பஸ் டிரைவரான தியாகதுருகம் அருகே உள்ள பிரிதிவிமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த ஜெயபால்(49) என்பவர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்