வெள்ளகோவில்
வெள்ளகோவில், எம்.பழனிச்சாமி நகர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் செந்தில்குமார் 42, இவர் கார் மெக்கானிக் ஆவார். செந்தில்குமார் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு கோவை -கரூர் ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் மொபெட்டில் வந்து கொண்டிருந்தபோது கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த அரசு பஸ் செந்தில்குமார் மீது மோதி விட்டது,
இதனால் செந்தில்குமாருக்கு தலையில் பலத்த அடிபட்டுவிட்டது உடனே அருகில் இருந்தவர்கள் செந்தில்குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் முன்பே செந்தில்குமார் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து பஸ்ஸை ஓட்டி வந்த தேனி மாவட்டம், உப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வசந்தராஜா 37, என்பவர் மீது வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
----