சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-28 19:11 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பீல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் வெங்கடேசன் (வயது 27). இரு சக்கர வாகன பழுது நீக்கும் (மெக்கானிக்) தொழில் செய்து வருகிறார். இவர் 17 வயதுடைய சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, வெங்கடேசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்