கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்குவதை தடுக்க நடவடிக்கை

வீணாகும் அபாயம் இருப்பதால் கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-02-21 18:45 GMT

கொரடாச்சேரி:

வீணாகும் அபாயம் இருப்பதால் கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சம்பா பருவம்

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் நடப்பு சம்பா பருவத்தில் 1,250 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது

டெல்டா மாவட்டங்களில் மட்டும் 2 லட்சம் டன் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கிறது. இதனால் ஏற்படக்கூடிய இழப்பு அதில் பணிபுரியக்கூடிய கொள்முதல் நிலைய ஊழியர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

வீணாகும் அபாயம்

ஏற்கனவே இயக்க இழப்புத்தொகை செலுத்த முடியாததால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான பருவ கால பணியாளர்கள் இந்த பருவத்தில் பணி நியமனம் செய்யப்படவில்லை. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே நெல் முட்டைகள் தேக்கம் அடைந்தால் நெல் சேதம் அடைந்து, அவை கால்நடைகளுக்கு இரையாக கூடிய சூழ்நிலை ஏற்படும் என்றும் நெல் வீணாகும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதை தடுக்க ஏற்கனவே நடைமுறையில் இருந்த தற்காலிக திறந்தவெளி சேமிப்பு மையங்களை மீண்டும் திறந்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி இருக்கும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அங்கு நகர்வு செய்து, அதில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளார்.

பாதுகாக்க நடவடிக்கை

இதுகுறித்து ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் அதன் மாநில பொதுச்செயலாளர் இளவரி கூறுகையில், விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்று வருகிறார்கள். இவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கினால் நெல் வீணாகும் அபாயம் உள்ளது. இதை தடுக்க முதல்-அமைச்சரும், உணவுத்துறை அமைச்சரும் தேவையான நடவடிக்ககளை எடுக்க வேண்டும்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்