கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கலவையில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் தேசிய கால்நடை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலவை பால் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது. பால் கூட்டுறவு சங்க தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க செயலாளர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
கால்நடை உதவி மருத்துவர் தணிகைவேல் மருத்துவ குழுவினர் மூலமாக 700 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இதில் மழையூர் கால்நடை உதவி மருத்துவர் சரத்பாபு, மருத்துவ குழுவினர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், கறவை மாடு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.