மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு

மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு

Update: 2023-05-12 18:45 GMT

பனைக்குளம்,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி அறிவுரையின்படி மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஜி.மருது பாண்டியன் இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தனர். முதல் கட்டமாக மண்டபம் மேற்கு ஒன்றியம் பட்டணம் காத்தான் முதல் நிலை ஊராட்சி பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அ.தி.மு.க கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க ஆட்சி மீண்டும் அமைந்திட வேண்டியும், எடப்பாடி பழனிசசாமி நீண்ட ஆயுள் காலம் வாழ்ந்திட வேண்டியும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வாலாந்தரவை கிராமத்தில் உள்ள செஸ்ட் ஏஞ்சலின் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் ஒன்றிணைந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலையில் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்