ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
ஆண்டிப்பட்டியில் ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
ஆண்டிப்பட்டியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கக்கோரி, ஜனாதிபதியிடம் வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள், வணிகர்கள் பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், பாண்டிச்செல்வம், பேரூர் செயலாளர் ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.