ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம்
சாக்கோட்டை ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் புதுவயலில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
காரைக்குடி
தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெறக்கோரி சாக்கோட்டை ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் புதுவயலில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பசும்பொன் மனோகரன் தலைமை தாங்கினார். சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் லோகநாதன் முன்னிலை வகித்தார். சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப சின்னத்துரை முதல் கையெழுத்திட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. சார்பில் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஏ.கே.முத்துச்சாமி, மாவட்ட பொருளாளர் சார்லஸ், மாவட்ட பிரதிநிதி மணிமொழியன், மாவட்ட துணை செயலாளர் உடையப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாயாண்டி, ராமநாதன் தி.மு.க. பேரூர் கழக செயலாளர் பக்ருதீன் அலி, காங்கிரஸ் வட்டார தலைவர் கருப்பையா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் காக்கூர் ராஜேந்திரன் மற்றும் ராஜேந்திரன் ராஜ்கமல் ஆகியோர் கலந்து கொண்டனர்.