ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்

ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Update: 2023-07-09 18:45 GMT

தேவகோட்டை

தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை திரும்ப பெறுமாறு ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேவகோட்டை நகரில் நேற்று கருதாவூரணி வடகரையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சிவகங்கை ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பசும்பொன் சி.மனோகரன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சய், அப்பச்சி சபாபதி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கண்ணங்குடி ராஜேந்திரன், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் லோகநாதன், காரைக்குடி நிர்வாகிகள் ஆனந்தன், காரை கார்த்திக், தேவகோட்டை நகர நிர்வாகிகள் சரவணன், ராமநாதன், விக்னேஷ், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ம.தி.மு.க. நகரச் செயலாளர் சந்திரகுமார் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்