ம.தி.மு.க.வில் அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்

ம.தி.மு.க.வில் அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று சிவகாசியில் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் துரைவைகோ பேசினார்.

Update: 2022-12-22 20:51 GMT

சிவகாசி, 

ம.தி.மு.க.வில் அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று சிவகாசியில் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் துரைவைகோ பேசினார்.

செயல்வீரர்கள் கூட்டம்

ம.தி.மு.க.வின் விருதுநகர் மேற்கு, கிழக்கு மாவட்டத்தின் செயல்வீரர்கள் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். குமரேசன், கோதண்டராமன், சூலக்கரை லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 15 ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் கட்சி போதிய வளர்ச்சி பெறவில்லை. அதற்கு சில நிர்வாகிகள் காரணம். இனிவரும் காலங்களில் கட்சியில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் போட்டு கட்சி வளர்ச்சி குறித்து நிர்வாகிகள் பேச வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தீர்மானங்கள்

2024 பாராளுமன்ற தேர்தலின் போது விருதுநகர் தொகுதியில் துரை வைகோ போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணை பொது செயலாளர் ராஜேந்திரன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், திருத்தங்கல் சீனிவாசன்,பங்காருசாமி, கணேசன், சுபாஷ்சந்திரபோஷ், சுப்பிரமணி, சிவசுப்பிரமணியம், சங்கர், அய்யனார், மாதவன், பெரியசாமி, முருகன், மாரியப்பன், கண்ணன், பாபு, தினகரன், போஸ், நாகராஜ், பாண்டிகணேசன், மாவட்ட பிரதிநிதி தமோதரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சிவகாசி நகர செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான ராஜேஷ் நன்றி கூறினார்.

பட்டாசு தொழில்

தொடர்ந்து துரைவைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தின் முக்கிய தொழிலான பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் போது விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதில் தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பம் இல்லை. கட்சியின் தலைவர் வைகோ, மூத்த நிர்வாகிகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் தற்போது இருப்பதால் கூட்டணி கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கான வாய்ப்பை வழங்கினால் போட்டியிடுவேன். விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் மத்திய அரசு தான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்