ம.தி.மு.க. மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம்
ம.தி.மு.க. மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம்
மயிலாடுதுறையில் ம.தி.மு.க. மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் மார்க்கெட் கணேசன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்கள் மற்றும் நகர வார்டு பகுதிகளில் உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து கட்சியை வலுப்படுத்துவது. அனைத்து பகுதிகளிலும் கட்சிக்கொடி ஏற்றுவது. வருகிற 14-ந்தேதி மயிலாடுதுறைக்கு வரும் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரைவைகோவிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. வைகோவின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்ட குறும்படத்தை மயிலாடுதுறையில் ஒரு திரையரங்கில் வெளியிட்டு அதில் அனைத்து அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள் மற்றும் சேவை அமைப்புகளை அழைத்து அக்குறும்படத்தை காண ஏற்பாடு செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர்கள் கொளஞ்சி, வாசு, ரவி, கொள்கை விளக்க அணி துணை செயலாளர் அழகிரி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் ஜமீலுதீன் நன்றி கூறினார்.