ம.தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

ம.தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-20 18:58 GMT

ஆலங்குளம், 

ஆலங்குளத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் சுகேந்திரன். சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருதுநகர் மேற்கு மாவட்ட துணைசெயலாளர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் விநாயக மூர்த்தி, குமரேசன், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். அனைத்து கிளைகளிலும் 3 மாதத்திற்கு ஒருமுறை செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்