மாயூரநாதர் கோவில் குடமுழுக்கு முன்னேற்பாடு கூட்டம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் மாயூரநாதர் கோவில் குடமுழுக்கு முன்னேற்பாடு கூட்டம் நடந்தது.

Update: 2023-09-01 18:45 GMT

மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள மாயூரநாதர் கோவில் குடமுழுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணியளவில் நடக்கிறது. குடமுழுக்கு தொடர்பாக அனைத்து அலுவலர்களுக்கான முன்னேற்பாடு கூட்டம் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.இந்த கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி கூறியதாவது:- குடமுழுக்கு விழா சிறப்பாகவும், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாதவாறும் ஒவ்வொரு துறை அலுவலரும் செயல்பட வேண்டும். குறிப்பாக போலீசார், பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பேரிகாட் மற்றும் கயிறு கொண்டு தடுப்பு அரண் அமைத்திட வேண்டும். யாகசாலை பூஜைகள் தொடங்கும் முதல் குடமுழுக்கு நடைபெறும் வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கு எவ்வித சிரமமும் அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் மோகனசுந்தரம், உதவி கலெக்டர்கள் யுரேகா, அர்ச்சனா, துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்