மாயூரநாத சுவாமி கோவில் தேரோட்டம்
மாயூரநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்
ராஜபாளையம்-மதுரை சாலையில் மாயூரநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி தேரோட்ட திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் மண்டக படிதாரர்கள் சார்பில் பூச்சப்பரம், சிம்ம வாகனம், கருட வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன், சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, கோவில் செயல் அலுவலர் ராஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.