தச்சநல்லூர் அம்மா உணவகத்தில் மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு
தச்சநல்லூர் அம்மா உணவகத்தில் மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு செய்தார்.
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 13-வது வார்டுக்கு உட்பட்ட அம்மா உணவகத்தில் நேற்று மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்தும், கையிருப்பு பொருட்கள் குறித்தும் பணிபுரியும் பணியாளரிடம் கேட்டறிந்தார். உணவு சாப்பிட வந்த பொதுமக்களுக்கு சிறந்த முறையில் உணவு வழங்கிட அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.