விக்கிரவாண்டியில் மயிலாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டியில் மயிலாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-06-03 16:42 GMT

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி கலைஞர் நகர் சலவை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மயிலாரம்மன் கோவில், விநாயகர் கோவில், முருகன் கோவில் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு, நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று  முதல் கால யாக சாலை பூஜை, பூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக நாளான இன்று காலை 2-ம் கால யாக சாலை பூஜையுடன் கடம் புறப்பாடு நடைபெற்று, மயிலாரம்மன், விநாயகர், முருகன் கோவில் கோபுர விமானம் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்