திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ் 60 வார்டுகளிலும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதுபோல் தேவையான வளர்ச்சி திட்டப்பணிகளையும் நிறைவேற்றி வருகிறார்.
இந்தநிலையில் 50-வது வார்டு பகுதியில், மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ் மேயர் தினேஷ்குமார் மக்களை சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். சாலைவசதி, கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படை தேவைகளை அவர் ஆய்வு செய்தார். பொதுமக்கள் தெரிவித்த அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் தி.மு.க. வட்ட செயலாளர் சல்மான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்