கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்

விழுப்புரம் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானாா்.

Update: 2023-03-18 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள பானாம்பட்டை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகள் வரலட்சுமி (வயது 21). இவர் கடலூர் அரசு கல்லூரியில் எம்.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கடந்த 15-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர் பல இடங்களில் தேடியும் வரலட்சுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து சுந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்